திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப் பள்ளி மேய செழும் சுடரைக்
கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண் நுதலாரைக் கழல் பணிந்து
மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து
மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்.