திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கழிக் கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச்
சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும் பரவிப் போய்த் தோகைமார் தம்
விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி
மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும்.