திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்திப்
பா அலர்ந்த செந் தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்
மேவும் அன்பு உறு மேன்மை ஆம் தன்மையை விளங்கிட அருள் செய்தார்.

பொருள்

குரலிசை
காணொளி