திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
போந்து மா மாத்திரர் தம் போர் ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை
வாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும்
காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் சரம் பரவு காதல் கூர
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில்.