திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி
மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடி பரவி அன்று இரவு துயிலும் போது
கான் நாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில் அணைந்து