திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நாவுக்கரசர் எழுந்து அருளும் நல்ல திருவார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவு உற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர் கொள்ள மெய் அன்பரோடும்
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பணை எல்லை கடந்து போந்தார்.