திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின்
தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர்’ என்றலும், ‘சுடர்த் திங்கள்
மேய வேணியார் அருளும் இவ்வாறு எனில் விரும்பும் தொண்டர்கேளாடும்
போயது எங்குநீர் அங்கு யான் பின் வரப் போவது’ என்று அருள் செய்தார்.