திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பு அமை வதனம் ஆகும் பதும நல் நிதியம் பூத்த
நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி
அல்பொலி கண்டர் தந்த அருட்கு அடையாளம் காட்ட.

பொருள்

குரலிசை
காணொளி