திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய் சோர்ந்து தாமே ‘தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங் கழு ஏற்றுவான் இவ் வேந்தனே’ என்று சொன்னார்.

பொருள்

குரலிசை
காணொளி