திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருமருகல் நகரின் கண் எழுந்து அருளித் திங்களுடன் செங்கண் பாம்பு
மருவு நெடுஞ் சடை மவுலி மாணிக்க வண்ணர் கழல் வணங்கிப் போற்றி
உருகிய அன்பு உறு காதல் உள் அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப்
பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம்.

பொருள்

குரலிசை
காணொளி