திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திடக் கடி மணக் குளிர் கால் வந்து
உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப
இலகு செந் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை.