திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல்
வெள்ள நீர் கண் பொழியத் திருமுத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது
வள்ளலார் எழுக என மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்.