திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
என்று பிள்ளையார் மொழிந்து அருள் செய்திட இருந் தவத்து இறையோரும்
‘நன்று நீர் அருள் செய்ததே செய்வன்’ என்று அருள் செய்து நயப்பு உற்ற
அன்றை நாள் முதல் உடன் செலும் நாள் எலாம் அவ் இயல்பினில் செல்வார்
சென்று முன் உறத் திருஅம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.