திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உள்ளோர்க்கும்
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை
தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர்
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ் உலகும் ஏத்தும் நாளில்.