திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வண் புகலி வேதியனார் ‘மாதர் மடப்பிடி’ எடுத்து வனப்பில் பாடிப்
பண் பயிலும் திருக்கடைக் காப்புச் சாத்த அணைந்து பெரும் பாணர் தாம்
நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்கு
எண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே.