திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செல்வம் மலி திருப்புகலிச் செழும் திரு வீதிகள் எல்லாம்
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே
எல்லை இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி
அல்கு பெருந்திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி