திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும்
மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில்
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள
நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று
ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமை அவர்க்கு அருள் செய்