திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி இன் அமுது என ஞானம்
குழைத்து அளித்திட அமுது செய்தருளிய குருளையார் வரக் கண்டு
மழைத்த மந்த மாருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவித்
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி.

பொருள்

குரலிசை
காணொளி