திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணனார் தாம்
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ள இடும் பொழுதின் கண் குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டர் உடன் மருவும் காலை.