திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நிலமிசைப் பணிந்த குலச் சிறையாரை நீடிய பெருந்தவத் தொண்டர்
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம் படியின் நின்று எழாவகை கண்டு
மலர் மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம்
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற.