திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கும்பிடும் கொள்கையின் குறி கலந்து இசை எனும் பதிகம் முன் ஆன பாடல்
தம் பெருந்தலைமையால் நிலைமை சால் பதி அதன் பெருமை சால்பு உற விளம்பி
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர
நம்பர் தம் பதிகள் ஆயின எனைப் பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார்