திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும்
நம் பெருமான் தன் திரு அருள் பெருகும் நன்மை தான் வாலிதே’ என்ன
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசைத்தாழ்ந்து அடி வணங்கித்
தம் பெருந் தவத்தின் பயன் அனையார்க்குத் தன்மை ஆம் நிலை உரைக்கின்றார்.