திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதிச் சடையார் கோயில்
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்தாகப் புனை முத்தின் சிவிகை நின்றும்
அங் கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு திருமுன் வணங்கச் சாரும் காலை.