திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக் கொழுந்தினைக் கால் வளையப்
பொன் திரள் மேருச் சிலை வளைத்த போர் விடையாளியைப் போற்றி இசைத்து
நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார்.