திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவுஇலா அருள் புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித் தலை அளித்து அருளும் அப்பொழுதில்
ஓங்கு எயில் புடை சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவத் தொண்டரை நோக்கி
‘ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது’ என வினவ.