திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண
பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி
விதி நிலவு வேத நூல் நெறியே ஆக்க
வெண்ணீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த
கதி அருளிக் காழி நகர் வாழ வந்தார
கண் நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ
மதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல