திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போது
தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ள
அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில்.