திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உருகிய அன்பு உறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல
மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர்ப் புளகம் வளர்க்கும் நீராய்
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று,
பொரு இல் பதிகம் ‘போகம் ஆர்த்த பூண் முலையாள்’ என்று எடுத்துப் போற்றி.

பொருள்

குரலிசை
காணொளி