திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து ஓதுவார் நோக்க
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள்
சாதியா வகை கண்டு அமண் குண்டர்கள் தளர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி