திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அரசு அருளிச் செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட
சிரபுர வேந்தரும் சிந்தையின்கண் தென் திருவாரூர் வணங்குதற்கு
விரவிய காதலின் ‘சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன்’ என்று
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்.