திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளிக் கருணை கூர்ந்த
செய்ய சடை வானவர் தம் அஞ்சு எழுத்தும் எழுதிய செம்பொன் தாளங்கள்
ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த
வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்த அன்றே.