திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத் தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப் பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார்.