பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித் தண்டலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழத் தெண் திரைக் கடல் பவளமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும் கொண்டு இரட்டி வந்து ஓதம்அங்கு எதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி.