திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அருவிலையில் பெரும் காசும் அவையே ஆகி
அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்து பொங்கி
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும்
மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆகத்
திரு முடி மேல் திங்கெளாடு கங்கை சூடும்
சிவ பெருமான் அருள் செய்யச் சிறப்பின் மிக்க
பெருமை தரு சண்பை நக