திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மன்னு திரு நள்ளாற்று மருந்தை வணங்கிப் போந்து வாச நல் நீர்ப்
பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந் நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச் சாத்த மங்கை மூதூர்
தன்னில் எழுந்து அருளினார் சைவ சிகா மணியார் மெய்த் தவத்தோர் சூழ.