திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்விச்
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகைப் பரப்பாலே
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணை உற முன்னே
நிவந்த நீல நுண் துகில் விதானித்தது போன்றது நெடுவானம்

பொருள்

குரலிசை
காணொளி