பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாடம் நிரை மணி வீதித் திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் நாடு உய்யப் புகலிவரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்று ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள நித்தில யானத்து நீங்கி.