திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அங்கு அப்பதி நின்று எழுந்தருளி அணி திரு ஆலம் பொழில் வணங்கிப்
பொங்கு புனல் பொன்னிப் பூந் துருத்திப் பொய் யிலியாரைப் பணிந்து போற்றி
எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள எப்பதியும் தொழுது
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக் கண்டியூர் தொழச் சென்று