திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள்
தாதை யாரையும் வெளியே தாங்கு அரிய மெய்ஞ்ஞானம் தம் பால் வந்து
போத முலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும் முன் வணங்கிப் போற்றி
மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா இறைஞ்ச விருப்பின் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி