திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப்
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி
‘உற்று உமை சேர்வது’ எனும் திரு வியமகம் உவகையில் எடுத்து ஓதி
வெற்றி ஆக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி