திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிந்தை இடை யறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்
கந்தம் மிகை ஆம் கருத்தும் கை உழவாரப் படையும்
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும்
அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய.

பொருள்

குரலிசை
காணொளி