திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேல் பொலிவது என்ன
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச்
செங்கை நிறை மலர் கொண்டு தூவித் திரு இருக்குக் குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான் அரசாளும் ஆரூர் தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர்.