திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அடியார் ஆம் இமையவர் தம் கூட்டம் உய்ய
அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே! செங்கண்
நெடியானும் நான்முகனும் காணாக் கோல
நீல விட அரவு அணிந்த நிமலா! வெந்து
பொடியான காமன் உயிர் இரதி வேண்டப்
புரிந்து அளித்த புண்ணியனே! பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழு