திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும்
துப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுதிடும்’ எனச் சொல்லி
மெய்ப் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடை கொடுத்து அருளிப்போய்
ஒப்பு இலாதவர் தமை வழி இடைப் பணிந்து உருகும் அன்பொடு செல்வார்.