பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒத்தி அடுத்த நடை பெறப் பாடி ஆர்வம் உற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ இளங் கோலத்துக் காட்சி கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம்.