பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் மாடு நிறை மடவார்கள் மங்கலம் ஆம் மொழிகளால் வாழ்த்தி வாசத் தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பார் கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக.