திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்திப்
பல் பெருந்தொண்டர் எதிர் கொளப் பரமர் தம் திருத்தினை நகர் பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணி குழியினை அணைந்து ஏத்தி
மல்கு வார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்து உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி