திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பல்கு தொண்டர் தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழச்
செல் கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தரக் கண்டு
மல்கு தேவரே முதல் அனைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம்
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார்

பொருள்

குரலிசை
காணொளி