திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச் சூல கபாலக் கரத்துச் சுடரும் மேனி
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கு காரி கரை முன்னர் சென்று
புக்கு இறைஞ்சிப் போற்றி இசைத்து அப் பதியில்