திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
திருப் பெருகு பெருங் கோயில் சூழ வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று
விருப்பு உறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார் தமைப் பாட மேவும் காதல்
பொருத்தம் உற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூ ஆர் கொன்றை.